சென்னை யானைக்கவுனியில் புதிய பாலம் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி 30 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் சேகர்பாபு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாலம் கட்ட டெண்டர் விட இருப்பதாகவும், விரைவில் பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டப்படும் என்றார்.
Discussion about this post