மு.க. ஸ்டாலின் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு வெளிப்படையாகவே 200 ரூபாய் டோக்கன் வழங்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டங்களில் பங்கேற்க திமுக தொண்டர்களோ, ஊர் மக்களோ ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் சிலர், ஸ்டாலினை நோக்கி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் கிராம சபை கூட்டங்களுக்கு, பணம் கொடுத்து, மக்களை அழைத்து வருவதோடு, சாதகமான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே மற்ற இடங்களில் மறைமுகமாக பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்த நிலையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் கூட்டுடன்காடு கிராமத்தில் பட்டப்பகலில் பணம் வழங்கப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய நிகழ்ச்சியில், பங்கேற்ற சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மஞ்சல் நிறத்தில் டோக்கன் ஒன்று வழங்கப்பட்டது. கூட்டம் முடிந்த பிறகு அந்த டோக்கனை கொடுத்துவிட்டு, 200 ரூபாய் பணத்தை பெற்றுச் சென்றனர்.
Discussion about this post