நெல்லை மாவட்டம் அத்தியூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 20 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டி பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம், அத்தியூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 20 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்தை எடுத்து வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த சங்கர் ராஜ் சிறிது நேரம் கழித்து அந்தப் பணத்திற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார். எனினும் மேலதிகாரிகளின் அனுமதிக்கு பின்னரே பணம் ஒப்படைக்கப்படும் என்று பறக்கும் படையினர் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Discussion about this post