சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பதிலுரை ஆற்றினார். அதில், துணை மதிப்பீடுகள், மொத்தம் 17 ஆயிரத்து 715 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்கிறது என்றார். இதில், 11 ஆயிரத்து 523 கோடியே 74 லட்சம் ரூபாய் வருவாய் கணக்கிலும், ஆறாயிரத்து 191 கோடியே 25 லட்சம் ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும் என்று குறிப்பிட்டார்.
இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு, ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் தமிழ்நாடு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் நிலுவை கடன்களை பங்கு மூலதன உதவியாக மாற்ற, ஆயிரத்து 562 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
Discussion about this post