2020-21ம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு தற்போது ஒரு லட்சத்து 13 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வருவதாகவும், 2020-21ம் நிதியாண்டில், மேலும் 10 ஆயிரத்து 276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 100 கோடி ரூபாயும், கட்டுமானப் பணிகளுக்காக 431 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக காவல்துறைக்கு 8 ஆயிரத்து 876 கோடியே 57 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு 405 கோடியே 68 லட்சம் ரூபாயும், சிறைத்துறைக்கு 392 கோடியே 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.