இரிடியம் தருவதாக கூறி சினிமா பாணியில் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் தனக்கு தெரிந்தவர்களிடம் இருடியம் உள்ளதாகவும் அதனை வீட்டில் வைத்தால் தொழில் வளர்ச்சி அடையும் என்று ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதனையடுத்து அந்தியூர் பேருந்து நிலையம் வந்த ராமலிங்கத்திடம் பணத்தை பெற்றுக் கொண்ட சதீஷ்குமார் உள்பட 7 பேர் ஒரு சொம்பை கொடுத்து இரிடியம் எனக் கூறி ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அந்தியூர் காவல்துறையினர், 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சதீஷ் குமார் தப்பியோடிய நிலையில் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post