மருத்துவ படிப்புகளை பாதியில் கைவிட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், கல்லுரியில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டால், ஒரு லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு இடங்கள் பெற்ற மாணவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.