மன்னிப்பு கடிதம் மற்றும் ஒன்றரை லட்சம் முன் பணம் அளித்தால் பாடகி சின்மயியை மீண்டும் உறுப்பினராக சேர்த்துகொள்வோம் என்று டப்பிங் யூனியன் அறிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர்கள் சம்மேளனத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய டப்பிங் யூனியன் நிர்வாகிகள், பாடகி சின்மயி டப்பிங் யூனியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதை கண்டிப்பதாக தெரிவித்தனர். மேலும், பாடகி சின்மயி நீக்கப்பட வில்லை சந்தா கட்டாததால் மட்டுமே அவரை டப்பிங் யூனியனில் இருந்து விலக்கி வைத்துள்ளோம் என்று விளக்கமளித்த நிர்வாகிகள், ஒன்றரை லட்சம் முன் பணம் கொடுத்து, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் சின்மயியை மீண்டும் டப்பிங் யூனியத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்வோம் என்றும் கூறினர்.
Discussion about this post