இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பேத்தியின் திருமணம், அரசு தொலைக்காட்சியில் அதிகமானோர் கண்டு ரசித்த திருமணம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் லண்டனில் உள்ள வின்ட்சர் தேவலாயத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக் ப்ரூக் என்பவரை அவர் காதலித்து வநதார். ப்ரூக் படிப்பை பாதியிலேயே முடித்து ஓட்டலில் வெயிட்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச குடும்பத்தினரின் திருமண விழாவை இங்கிலாந்து அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. இதை 20 லட்சம் பேர் கண்டு களித்தனர்.
இதன்மூலம், அரசு தொலைகாட்சியில் அதிகமானோர் கண்டு களித்த திருமணம் என்ற பெருமையை இளவரசி யூஜெனியின் திருமண விழா பெற்றுள்ளது.
இளவரசர் சார்லசின் மகன்கள் வில்லிம்ஸ் மற்றும் ஹேரி ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இளவரசர் ஆண்ட்ரூ – சாரா தம்பதியின் மகளான இளவரசி யூஜினி, பிரிட்டன் முடிவரிசையில் 9வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post