சென்னையில் தொழிலதிபரை மிரட்டி 50 லட்சம் ரூபாய் பணம் கேட்ட ரவுடியின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை சேர்ந்த தொழிலதிபரான மஹபுல் பாட்ஷா என்பவர் கோழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு வந்த செல்போன் அழைப்பு ஒன்றில், ரவுடி இம்ரான் பேசுவதாகவும், தொழில் நடத்த 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும், பணம் தரவில்லையெனில், தன்னையும், குடும்பத்தில் உள்ளவர்களை கொலை செய்துவிடுவதாக ரவுடி இம்ரான் மிரட்டியதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மஹபுல் பாட்ஷா புகார் தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த ஆண்டு 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், காவல்துறையில் புகார் கொடுத்ததையடுத்து இம்ரான் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த மஹபுல், காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸை தானே கொலை செய்ததாகவும் கூறி மிரட்டியதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post