சென்னையை அடுத்த எண்ணூரில், தூங்கிக்கொண்டிருந்த ரவுடியை 10 பேர் கும்பல் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் பாண்டியன். பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், தனது வீட்டில் பாண்டியன் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல், பாண்டியனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் கேட் ராஜேந்திரன் என்ற பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கவே இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Discussion about this post