திருத்தணி அருகே பட்டப்பகலில் ரவுடியை ஓட ஓட வெட்டிவிட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல். லாரி ஓட்டுநரான இவர் மீது திருத்தணி காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. வழக்கம்போல் திருத்தணி ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந் போது, அப்போது, 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வடிவேலு சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியது. பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த வெட்டுக்காயமடைந்த வடிவேல் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்பகை காரணமாக வெட்டப்பட்டார என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Discussion about this post