அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வருகிற 2020 ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு தனது மற்றொரு ரோவரை அனுப்ப இருக்கிறது. அதில் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களை கொண்ட மைக்ரோ சிப்பையும் அந்த ரோவருடன் அனுப்ப இருக்கிறது. அது பற்றிய செய்தி தொகுப்பு …
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வருகின்ற 2020 ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு தனது மற்றொரு ரோவரை அனுப்ப இருக்கிறது. அதில் புதுமையான முயற்ச்சியாக பூமியில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களின் பெயர்களையும் ரோவருடன் அனுப்ப இருக்கிறது. அதற்கான அழைப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது நாசா.
அந்த பதிவில், 2020 ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்பட உள்ளது. அந்த ரோவரில், மில்லியன் கணக்கான மக்களின் பெயர்களை மைக்ரோ சிப் வடிவில் கொண்டு செல்ல இருக்கிறது. எனவே, உங்களின் பெயரையும் பதிவு செய்து செவ்வாய் கிரகத்தில் உங்களது பெயரையும் முத்திரையிடலாம் என நாசா தெரிவித்துள்ளது.பெயர்களை பூர்த்தி செய்ய கடைசி தேதியாக செப்டம்பர் 30 ம் தேதியை அறிவித்துள்ளது நாசா. இதற்காக தனியாக இணைய தளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் மஸ்க், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூபர்க் போன்றவர்கள் நிலவில் குடியேற்றங்களை ஏற்படுத்தினால், மனிதர்கள் அங்கு சென்று வசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அது வரை செவ்வாயில் மனிதர்களின் பெயரை சொல்லும் வகையில் நாசாவின் புதிய முயற்சியாக இது இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Discussion about this post