தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவை அடுத்து தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கயிறு திரிக்கும் தொழில் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் பல குடும்பங்கள் கயிறு திரிக்கும் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. கயிறு தயாரிக்கும் தொழிலில் குடும்பம் குடும்பமாகவும், கூலி ஆட்களை வைத்தும் வேலை செய்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். தாங்கள் தயாரிக்கும் கயிறுகளை அரசே கூட்டுறவுச் சங்கம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்தால் எங்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்கும் என்று கயிறு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
பிளாஸ்டிக் தடை உத்தரவால், பிளாஸ்டிக் கயிறுகளுக்கு மாற்றாக மக்கள் நார் கயிறுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
Discussion about this post