பழனி மலைக்கோயிலில் 70 நாட்கள் நடைபெற்ற வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கு பிறகு ரோப் கார் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரோப் கார் சேவை இயக்கப்படுகிறது. இதன் மூலம், மலை அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை கடந்த ஜூலை 29-ம் தேதி நிறுத்தப்பட்டது. 70 நாட்களுக்கு பிறகு ரோப் கார் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.
சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ரோப் காரில் பக்தர்கள் பயணம் செய்ய தொடங்கினர். ரோப் கார் சேவை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post