அமெரிக்க ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஃபெடரரை வீழ்த்தினார் டிமிட்ரோவ்

அமெரிக்க ஓபன் காலிறுதி சுற்றில் பல்கேரிய வீர கிரிகோர் டிமிட்ரோவிடம் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. காலிறுதி சுற்றில் முன்னணி வீரரும், 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் மற்றும் பல்கேரியாவை சேர்ந்த கிரிகோர் டிமிட்ரோவும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-4, 6-3, 3- 6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஃபெடரரை வீழ்த்தி கிரிகோர் டிமிட்ரோவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Exit mobile version