உலகிலேயே முதன்முதலாக உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘மோப்பம் பிடிக்கும் அல்லது நுகரும் ரோபோக்களை’ இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்களில் வெட்டுக்கிளிகளின் உணர்கொம்புகள் பொருத்தப்பட்டுள்ளன. வெட்டுக்கிளிகள்போல சுற்றுபுறத்தில் மணத்தை வைத்து நோய்கள், போதைப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கண்டறிய முடியும் என்று இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.