பர்தா அணிந்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணை பிடித்து காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள கீழவீதி பகுதியில் ஜரீனா பேகம், கலாவதி, சரஸ்வதி, சாந்தா ஆகிய நான்கு பேரின் வீடுகளில் பணம் மற்றும் நகை திருட்டு போயுள்ளது. பட்டப்பகலில் ஆளில்லாத நேரத்தில் பூட்டியிருந்த வீடுகளில் பர்தா அணிந்த அடையாளம் தெரியாத, மூன்று பேர் கொண்ட கும்பல் திருடியுள்ளது. இதில் கடைசியாக கலாவதி என்பவரது வீட்டில் திருட முயன்றபோது சாம்சத் பேகம் என்பவரை பொதுமக்கள் பிடித்தனர். ஜரினா பேகம் என்பவரது வீட்டில் கொள்ளையடித்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்துடன் மற்ற இருவர் தப்பி சென்றனர். மேலும் பிடிபட்ட சாம்சத் பேகம் என்பவரை காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Discussion about this post