வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த திருடுடர்கள், சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னாம்பேட்டை தக்கடி தெருவில் வசித்து வரும் ஃபரூக் என்பவர், தோல் வியபாரம் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றிருந்ததை அறிந்த கொள்ளையர்கள், வீட்டினுள் நுழைந்து பீரோவில் இருந்த நகை, பணம், மற்றும் இருசக்கர வாகனம், டிவி உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அது மட்டுமின்றி, கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில், சாவகாசமாக சமைத்து சாப்பிட்டுவிட்டும் சென்றுள்ளனர். இக்கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post