ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் செல்போன் கடையின் கதவை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை கண்காணிப்பு காமிரா உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோபி செட்டிப்பாளையம் மொடச்சூர் சாலையில் ஜமாலுதீன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை கடையின் கதவில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர், பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவானது.
நேற்று வழக்கம் போல் கடையை திறந்த ஜலாலுதீன் பணம் மற்றும் செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
Discussion about this post