தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழிப்பறி மற்றும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வழிப்பறி மற்றும் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை தனிப்படைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களின் 2 மகன்கள், தாங்கள் கொள்ளையடித்த நகைகளை தென்காசியில் விற்கச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர், அவர்கள் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டே கால் கிலோ எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தென்காசி உட்கோட்டத்தில் மட்டும் பதிவாகியுள்ள 78 வழக்குகளில் அவர்கள் 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Discussion about this post