அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூர சாலைகள் தரம் உயர்த்தப்படும் என மத்திய நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி நிலை அறிக்கையில் சாலை மற்றும் நீர் போக்குவரத்து குறித்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். மறுசீரமைக்கப்பட்ட விரிவான தேசிய நெடுஞ்சாலை திட்டம் சாத்தியப்படுத்தப்படும் என்றும், சரக்கு போக்குவரத்துக்கு நதிகளைப் பயன்படுத்த அரசு விரும்புகிறது என்று கூறியுள்ளார்.
ரயில்வே உட்கட்டமைப்பை மேம்படுத்த 2018-ம் ஆண்டிற்கும் 2030-ம் ஆண்டிற்கும் இடையில் 50 லட்சம் கோடி ரூபாய் தேவை என்றும் கூறினார். அதேபோல், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜானா திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் கிலோ மீட்டர், தூர சாலைகள் தரம் உயர்த்த 80 ஆயிரத்து 250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
Discussion about this post