சென்னை நந்தம்பாக்கத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரங்கிமலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர் மயில்வாகனன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், வாகன ஓட்டுநர்களுக்கு சாலை விபத்தினை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது போன்றவற்றை
தவிர்த்தால் 50 சதவீத சாலை விபத்து உயிரிழப்புகளை குறைக்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் ஆட்டோ ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், சாலை விதிகளை முறையாக கடைபிடிக்கும் ஓட்டுநர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
Discussion about this post