தேசிய அளவில் விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைத்த சிறந்த மாநிலத்திற்கான விருதை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.
டெல்லியில் மத்திய அரசு சார்பில் நடைபெற்ற 31வது சாலை பாதுகாப்பு வாரம் 2020 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு சாலை விபத்துக்களைக் குறைப்பதில், சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலத்திற்கான விருது வழங்கப்பட்டது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறந்த மாநிலத்திற்கான விருதை வழங்கினார். தமிழகத்தின் சார்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு துறைகளில் சிறந்த மாநிலத்திற்கான விருதுகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post