காவிரியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், பரமத்திவேலூரில் காவிரி ஆற்றங்கரை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பால், நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம், படுகையணை, பரமத்திவேலூர், பொத்தனூர் உள்ளிட்ட காவிரி கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜேடர்பாளையம் மற்றும் பரமத்திவேலூரில் உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணற்பாங்கு மற்றும் சுழல் நிறைந்த பகுதி என்பதால் பொதுப்பணித்துறையினர் அந்த பகுதிகளுக்கு செல்ல தடை விதித்துள்ளனர். தடையை மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post