இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் சேர இந்த ஆண்டில் மொத்தம் 86,326 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
” சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து ஆக்டோபர் 1ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். குலுக்கலின்போது கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் பெற்றோரும் கலந்துகொள்ளலாம். குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆக்டோபர் 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.” என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கல்வி உரிமைச் சட்டப்படியான சேர்க்கைக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என குறிப்பிடத்தக்கது.
Discussion about this post