சென்னை, அடையாறு ஆற்றின் 3வது கட்ட மறுசீரமைப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 30 வடிகால்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 18 வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மூன்றாவது கட்டமாக நடைபெற்று வரும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களும் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் ஆற்றில் கலக்காமல், முறையாக மெட்ரோ கழிவுநீர் குழாய் இணைப்பை பெற்று, கழிவு நீரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும், இந்த பணிக்கு முழு ஒத்துழைப்பை அளித்தால் மட்டுமே தற்போது நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் சாத்தியம் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post