நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள கடைகளையும், நெரிசல் மிகுந்த கடைகளையும் மூட அறிவுறுத்தியுள்ளதாக, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் மக்கள் அதிகம் கூடும் பகுதியான ரங்கநாதன் தெருவில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வருவாய்த்துறையும், சுகாதாரத் துறையும் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறினார். சாதாரண கடைகளை தொந்தரவு செய்யவில்லை என விளக்கம் அளித்த அவர், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள கடைகளையும், வணிக வளாகங்களையும் தான் மூட அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
Discussion about this post