பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமென்றால் தற்போதைய திரையிசை பாடல்கள் கேட்பதை நிறுத்திவிட வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாள் நிகழ்ச்சி சேலம்
அயோத்தியாபட்டணம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த
நிகழ்சியில் கலந்து கொண்ட இளையராஜா கல்லூரி மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மாணவ, மாணவியரின் கேள்விக்கு பதில் அளித்த இளையராஜா, இசையமைப்பாளர்கள் காப்பி அடிக்காமல் சொந்த சிந்தனை கொண்டிருக்க வேண்டும் என்றார். பெரும்பாலும் இசையமைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டதில்லை என்ற அவர், பாடும் நிலாவே தேன்கவிதை பாடலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், பாரம்பரிய இசையை மீட்டெடுக்க வேண்டுமென்றால் தற்போதைய திரையிசைப் பாடல்கள் கேட்பதை நிறுத்திவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்
Discussion about this post