சென்னையில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத 379 பகுதிகளில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்படும் பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து வருகிறது. அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணிப்பதுடன், பொதுமக்கள் குறிப்பிட்ட பகுதிகளை விட்டு வெளியே செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. 14 நாட்கள் புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இந்த நிலையில், சென்னையில் இன்று 379 கட்டுப்பாட்டு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. புதிதாக தொற்று இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது 774 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன.
Discussion about this post