காஷ்மீரில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் திரும்பப் பெற்றதுடன், மீண்டும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்துள்ளார். “காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும், இந்த உத்தரவு வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
Discussion about this post