கிருஷ்ணகிரி அடுத்த குருபரபள்ளி வந்தடைந்த பிரமாண்ட கோதண்ட ராமர் சிலை அங்குள்ள மார்கண்டேய நதி பாலத்தில் சிக்கியுள்ளதால் அதனை மீட்க அதீத இழுவை திறன் கொண்ட வாகனத்தை சென்னையிலிருந்து வரவழைக்க பயணக் குழு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடகா ஈஸ்வரா செல்லும் பிரமாண்ட கோதண்டராமர் சிலை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டது.
350 டன் எடை கொண்ட இந்த சிலை கடந்த 5 தினங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அடுத்த குருபரபள்ளி வந்தடைந்தது. அங்குள்ள மார்கண்டேய நதி பாலத்தின் வழியாக கொண்டு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. புதியதாக மண் சாலைகள் உயரமாக அமைக்கப்பட்டு 4 நாட்கள் முயற்சிக்குப்பின் ஒருவழியாக ஆற்றின் மறுகரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்தநிலையில் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு சிலையை மேலே கொண்டுவர எடுத்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந்நிலையில் ஆற்றில் சிக்கியுள்ள கோதண்ட ராமர் சிலையை மீட்க அதீத இழுவை திறன் கொண்ட வாகனத்தை
சென்னையிலிருந்து வரவழைக்க பயணக் குழு முடிவெடுத்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.
Discussion about this post