நாமக்கல் மாவட்டத்தில், பெற்றோர் – முதியோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின் கீழ் முதியவர் ஒருவருக்கு சொத்து திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.
நடராஜபுரம் பகுதியை சேர்ந்த நல்லசாமி என்ற முதியவர், தன் சொத்துக்களை தான செட்டில்மென்ட் மூலம் தனது பேரனுக்கு எழுதி வைத்துள்ளார். இந்நிலையில் சொத்துக்களை பெற்றுக் கொண்ட தன் மகன் வாசுதேவன், தனக்கு உணவு அளிக்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமாரிடம் புகார் அளித்தார். வருவாய் கோட்டாட்சியர் நடத்திய விசாரணையில் உண்மைத் தன்மை அறியப்பட்டதால், பெற்றோர் – முதியோர் பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின் கீழ் முதியவர் நல்லசாமியின் சொத்து திருப்பி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Discussion about this post