தேங்காய் பட்டினம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட மீன்களை ஏற்றிச்சென்ற லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட மீன்கள் பிடிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடலில் இருந்து அழுகிய நிலையில் கொண்டுவரப்படும் இந்த மீன்கள் உரம் தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் பெட்டிகளில் நிரப்பப்பட்டு கண்டெய்னர்கள் மூலம் வெளியே எடுத்துச்செல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்த மீன்கள் அதிக துர் நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், லாரியில் ஏற்றப்பட்ட மீன்களை மீண்டும் கடலில் கொட்டச்செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
Discussion about this post