ஈரோடு மாவட்டம் புதுக்குய்யனூர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள புதுக்குய்யனூர் கிராமத்திற்குள், புகுந்த சிறுத்தை ஒன்று, கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை அடித்துக் கொன்று அட்டகாசம் செய்து வந்தது. அதனை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி கிராம மக்கள் வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து பவானிசாகரில் உள்ள சண்முகம் என்பவரது தோட்டத்தில் வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுடன் ஒரு ஆட்டையும் கட்டினர். அதிகாலை தோட்டத்தில் புகுந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது. அதற்கு கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தியதை அடுத்து சிறுத்தையை வனத்துறையினர் தெங்குமரஹடா வனப்பகுதிக்கு கொண்டுச் சென்று விட்டனர்.
Discussion about this post