அணைகள் இல்லாத மாவட்டங்களில் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை சேமிப்பதற்காக புதிய நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்காக ஆய்வுப் பணியை பொதுப்பணித் துறை தொடங்கியுள்ளது.
வரும் 2050-ல் குடிநீர் தேவைக்கு கூடுதல் 67 டிஎம்சி நீர் அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, பருவமழை மூலம் கிடைக்கும் நீரை முழுவதுமாக சேமிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள ஏரிகளை இணைத்தோ அல்லது புதிதாகவோ நீர்த்தேக்கங்களை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் பக்தவச்சலம் தலைமையில் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் சார்பில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கும் வகையில் அதற்கான அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக அணைகள் இல்லாத மாவட்டங்களான தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புதிய நீர்த்தேக்கம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
Discussion about this post