சென்னை தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின இல்லத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தரியாவின் திருமண அழைப்பிதழை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் திருமண அழைப்பிதழை வழங்கி வருவதாக குறிப்பிட்டார். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், அரசியல் குறித்து தற்போது பேச வேண்டாம் என்று தெரிவித்தார்.
Discussion about this post