உள்ளூர் மாடுகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர்

தமிழகத்தில் இருக்கின்ற உள்ளூர் இன நாட்டு மாடுகளை பாதுகாக்க முதலமைச்சரால் ஆணை பிறப்பிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் பகுதியில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் காங்கேயம் இன காளைகளின் ஆராய்ச்சி, பராமரிப்பு குறித்த ஆராய்ச்சி மையம் திறந்து வைக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் உள்ளூர் இன நாட்டு மாடுகளை பாதுக்காக்க முதலமைச்சர் ஆணையின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version