திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுபட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் 2 வயது ஆண் குழந்தை சுர்ஜித் விளையாடி கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் எதிர்பாராத விதமாக 26 அடி ஆழத்தில் தவறி விழுந்த சிறுவன் தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுனான். சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 40 மணிநேரங்களை கடந்துவிட்டது.
இந்நிலையில் மீட்பு பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் அருகில் இருந்து கவனித்து வருகிறார். அதிநவீன ரிக் வாகனம் மூலம் ஆழ்துளை கிணற்று அருகே 3 .மீ இடைவெளியில் மற்றொரு துளை தோண்டப்பட்டு வருகிறது. ஒரு மீட்டர் அகலகத்தில் ஒரு நபர் உள்ளே செல்லும் அளவிற்கு குழி தோண்டப்படுகிறது. இதில் தீயணைப்பு வீரர் உள்ளே சென்று குழந்தையை மீட்பது தான் திட்டம்.
அதன்படி ரிக் இயந்திரம் மூலம் இன்று காலை 6.30 மணியளவில் தோண்டும் பணி தொடங்கப்பட்டது. முதல் 15 நிமிடத்தில் 3 அடி ஆழம் அளவுக்கு தோண்டப்பட்டதை தொடர்ந்து, 10 அடி வரை விரைவாக தோண்டப்பட்டது. ஆனால் அதன்பின் 10 அடிக்கு கீழே பாறைகள் இருப்பதால் தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தால் பாறைகளை எளிதாக அகற்ற முடியவில்லை.
இந்நிலையில் தற்போது தோண்டப்பட்டு வரும் ரிக் இயந்திரம் 150 நியூட்டான் திறன் கொண்டது. இந்த வாகனம் கிராமத்துக்குள் வருவதற்கே பல்வேறு சிரமங்களை சந்தித்தது. இந்த ரிக் இயந்திரத்தின் மூலமாக சுரங்க பணிகள், மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும் இதனை வைத்து மீட்பு பணி மேற்கொள்ளும் போது சிரமம் ஏற்பட்டது.
இதன் காரணமாக 320 நியூட்டான் திறன் கொண்ட ரிக் வாகனம் தற்போது சிவகங்கையில் இருந்து வந்துள்ளது.அதன்மூலம் பாறைகளை எளிதில் குடைந்துவிடலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே சிறுவன் சுஜித்தை பத்திரமாக மீட்க #SaveSujith #Pray For Sujith என்ற ஹேஸ்டக்கை பொதுமக்கள் பகிர்ந்து வருகின்றனர் .
இவர்களை தொடர்ந்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தன்னுடைய டிவிட்டர் பதிவில் நானும் ஒரு குழந்தையின் ஒரு தகப்பன் அந்த வகையில் என்னால் சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது அந்த குழந்தை உயிர்பிழைச்சு வரணும் . உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு, கண்ணு நிச்சயம் வருவ தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி எழுந்து வா தங்கமே வேதனையோடு ஒரு தீபாவளி என்று தெரிவித்துள்ளர் .
மேலும் திரைப் பட நடிகர் ரஜினிகாந்த் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையினை மீட்கும் பணியில் விடாமுயற்ச்சியுடன் செயல்படும் அரசை குறை கூற முடியாது என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post