ஃபானி புயல் காரணமாக உருக்குலைந்த ஒடிசா மாநிலத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் கரையை கடந்த போது வீசிய சூறைக்காற்றால் 14 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ள, உயிரிழப்பு 16 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் புயல் பாதித்த இடங்களில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்த பட்டுள்ளன. கடற்படைக்கு சொந்தமான விமானங்கள் ஒடிசாவுக்கு நுப்பப்பட்டு நிவாரண பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகிறது.நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் நவீன் பட்நாயக் உறுதியளித்துள்ளார். இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.
Discussion about this post