அரசுக்கு எதிராக பேசிய விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்து மக்கள் முன்னணி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி பாலியல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட முகிலனை பார்க்க, நடிகரும், நாம் தமிழர் கட்சி பொறுப்பாளருமான மன்சூர் அலிகான், சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் வந்தார். அப்போது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசையும், அமைச்சரையும் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாகவும், காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினரை அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்தது.. மேலும் அடுத்த வாக்குப்பதிவு நடைபெறும் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைப்பேன் எனவும் கூறியுள்ளார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post