கோவை மாவட்டத்தில் தேன் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த திவான்சாபுதூர், பெரிய போது, வளந்தாயமரம் ஆகிய பகுதியில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். எந்த ரசாயனமும், மருந்தும் இல்லாமல் தென்னையில் விளைச்சல் அதிகரிக்க தென்னைக்கு நடுவே தேனீ வளர்ப்பிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பெட்டி மூலம் ஆண்டுக்கு ஆறு கிலோ தேன் கிடைப்பதாகவும், தமிழகம் மட்டுமில்லாமல், வெளிமாநிலங்களுக்கும் தேனை ஏற்றுமதி செய்து அவர்கள் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். தேனி வளர்ப்பதால் காய்கறிப் பயிர்களும் நல்ல விளைச்சல் தருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தேனை சந்தைப்படுத்த, கோவை மாவட்டத்தில் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post