ஜவுளித் துறையை மேம்படுத்த விசைத்தறி ஜவுளி உற்பத்திக்கான வடிவமைப்பு நிலையங்களை அமைக்க விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜவுளி உற்பத்தி மேம்பாட்டிற்காக கரூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட அதிக விசைத்தறிகள் இயக்கப்படும் பகுதிகளில், விசைத்தறி துணி வடிவமைப்புக்கான நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், அரசு சார்பில் விசைத்தறி சேவை பணிமனைகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், ஜவுளி உற்பத்தி மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post