பசும்பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 40 ரூபாயாகவும், எருமை பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயிக்க, தமிழக அரசுக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர், பால் விலை உயர்த்தப்படாத நிலையில், கால்நடை பராமரிப்பு, கால்நடைகளுக்கான தீவன விலை உயர்வு காரணமாக, பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக கூறினர்.
Discussion about this post