பெரும் நிறுவனங்கள் கடன் பெற்று செலுத்தாமல் இருக்கும் வாரா கடன்கள் தொகை 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பதாகவும், அவற்றை வசூலிக்க வங்கிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார மந்த நிலையை மீட்டெடுக்க மத்திய நிதி அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், பெரு நிறுவனங்கள், வங்கிகளில் கடனாக பெற்ற பெரும் தொகைகளை செலுத்தாமல் உள்ளதாகவும், இவ்வாறு செலுத்த வேண்டிய கடன் தொகை 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடன்களை முழுமையாக வசூல் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நிறுவனங்களின் கணக்குகளை வங்கிகள் மூட பார்ப்பதாக கூறினார். இதனால் பெறு நிறுவனங்களான அலோக் இன்டஸ்ட்ரீஸ், பாரத் ஸ்டீல், பூஷன் டெக்ஸ்டைல் போன்ற நிறுவனங்கள் பெற்ற மொத்த கடன் தொகையில் பாதியளவு கூட வசூல் செய்ய முடியாமல் வங்கிகள் பெரும் இழப்பை சந்தித்துவிட்டதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post