மூன்றாம் பாலினத்தவரின் வாழ்க்கைத் தரம் மேம்பட மத்திய மாநில அரசுகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் திருநங்கைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மூன்றாம் பாலினத்தவர்கள், தங்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் பேசிய அவர்கள் தங்களின் வாழ்க்கைத்தரம் உயர மத்திய , மாநில அரசுகள் உதவிட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
Discussion about this post