குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டு வரும் கிராம மீனவ பெண்கள் தமிழக அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தாலுகவிற்குட்பட்ட நம்புதாளை ஊராட்சியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழில்.
கடலில் குறைந்த மீன்கள் மட்டுமே கிடைப்பதாலும், சிறிது தூரம் சென்றால் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை பிடித்து செல்வதாலும் பசியும் பட்டினியுமாக இருந்த தங்களது வாழ்விற்கு தமிழக அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் வேலை நாட்களை 100 நாட்களிலிருந்து 150 நாளாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Discussion about this post