நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை கருதி அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஊட்டியில் கடந்த 17ஆம் தேதி முதல் மலர்கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போன்று, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி அடுத்த வாரம் நடைபெற உள்ளதால், வெளிமாவட்டங்களிலிருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத்துவங்கியுள்ளனர். இதற்காக அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் தேவையான அளவிற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தற்போது கூட்டம் அதிகரித்துள்ளதால், கோடை சீசன் வரையில், கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post