நாடு முழுவதும் இன்று 74வது குடியரசுத் தின விழா கோலாகலம்: வாகனங்களின் அணிவகுப்பு !

இந்தியாவின் 74வது சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. குடியரசுதினத்தை ஒட்டி இந்தியாவின் படைபலத்தை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் இராணுவ அணிவகுப்பு டெல்லி ராஜ பாதையில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக டெல்லி ராஜபாதையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்பு கொடியேற்றினார். சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் இந்த அணிவகுப்பானது நடைபெறும் என்று சொல்லப்படுகிறது. தங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு மாநிலத்திலிருந்து ஒரு வாகன அணிவகுப்பு நடைபெறுகிறது. காலாட்படை, குதிரைப்படை, கப்பற்படை, விமானப்படை போன்ற வீரர்களின் சாகச அணிவகுப்பும் இடம்பெறுகிறது. இந்த நிகழ்வில் எகிப்து நாட்டின் அதிபர் எல் சிசி கல்ந்து கொள்ள உள்ளார். YouTube video player

Exit mobile version