வடக்கு கொல்கத்தா மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. எனவே, அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையரிடம் பாஜக மனு கொடுத்தது. இதனையடுத்து வடக்கு கொல்கத்தா மக்களவை தொகுதிக்குட்பட்ட 200வது வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று காலை முதல் அந்த வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வாக்களித்து வருகின்றனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முழுவதும் துணை ராணுவ படையினரின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்குச்சாவடியின் அருகே இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Discussion about this post